UAE Tamil Web

திரும்பிய பக்கமெல்லாம் குப்பையுடன் இருந்த ஹைப்பர் மார்கெட் – சீல் வைத்த அமீரக அதிகாரிகள்..!

India-Hypermarkets-Research-Report

அபுதாபியின் மதீனத் சயீத் பகுதியில் அமைந்துள்ள ரிச்சீ: நியூ ஜென் ஹைப்பர் மார்கெட்டிற்கு கடந்த ஏப்ரல் மாதம் அபுதாபி வேளாண்மை மற்றும் பாதுகாப்பு ஆணைய (Adafsa) அதிகாரிகள் ஆய்விற்குச் சென்றனர்.

அப்போது ஹைப்பர் மார்கெட் அசுத்தமாகவும் சுகாதாரமற்றதாகவும் இருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். உணவுப் பொருட்கள் வைக்கும் பகுதிகளில் வடிகால் குழாய்கள் வெளியே தெரியும்படி இருந்திருக்கின்றன. தரை வெடிப்பிற்கு உள்ளானதால் அங்கே குப்பைகள் குவிந்து காணப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்களும் துப்பரவுப் பொருட்களும் ஒன்றாக வைக்கப்பட்டிருந்ததால் உணவுப் பொருட்கள் மாசுபடும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும் மார்க்கெட்டின் பல இடங்களில் பூச்சித் தொல்லை இருப்பதையும் அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

இதுகுறித்து நிர்வாகத்திடம் புகாரளித்த அதிகாரிகள் விரைவில் இவை சரிசெய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர். ஆனால் சில நாட்களுக்கு முன்னர், அதிகாரிகள் மீண்டும் இந்த மார்கெட்டிற்கு ஆய்விற்கு செல்கையில் மேற்கூறிய எந்த குறையையும் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து பிழைகளை சரிசெய்யும் வரை மார்க்கெட்டை மூட அதிகாரிகள் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து மார்கெட் மறு அறிவிப்பு வரும் வரையில் மூடப்பட்டது.

India-Hypermarkets-Research-Report
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap