போலி TOTOK ஆப்.. 730 திர்ஹம்ஸ் பணத்தை இழந்த பயன்பாட்டாளர்..!

Fake-Totok_1703d6eced8_large

அமீரகத்தில் இனி வாட்ஸ்ஆப் கால் (Whatsapp Call) பயன்படுத்த முடியாது என்று வெளியான நேரத்தில், எந்த ஆப் பயன்படுத்தி பேசுவது? என்று அனைவரும் திக்குமுக்காகி போனது யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு உண்மை. அந்த நேரத்தில் தான் காட்டுத்தீயில் பெய்த கனமழை போன்று வந்தது ToTok ஆப். இலவசமாக அனைவர்களிடமும் பேசிக்கொள்ள முடியும் என்றால், அதுவும் தெள்ளந்தெளிவாக பேச முடியும் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.?

இந்த ஆப்-ஐ ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் துபாயில் சமீபத்தில் இந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்த ஆப்பிள் பயன்பாட்டாளருக்கு ஏற்பட்ட இழப்பை பற்றிய தொகுப்பு தான் இந்த பதிவு.

பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில் “நேற்று இரவு வெளிநாட்டில் உள்ள எனது சகோதரரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். “உங்களிடம் ToTok இருக்கிறதா?” என்று நான் அவரிடம் கேட்டேன், “இல்லை” அவர் என்னிடம் கூறினார். “சரி, அது மீண்டும் ஆப் ஸ்டோரில் இருக்கிறதா (முன்னதாக ஆப்பிள் கைபேசியின் ஆப் ஸ்டோரில் பயன்பாட்டில் இருந்து, பின் பல காரணத்திற்காக தற்போது அதன் பதிவிறக்கம் தடை செய்யப்பட்டுள்ளது) என்று சரிபார்க்கிறேன் என்று பார்த்தேன்.”

“இந்த முறை ToTok Chat என்ற ஆப் இருந்ததை கவனித்து, டோடோக்கின் புதிய அறிமுகமாக இருக்கும், மீண்டும் ஆப் ஸ்டோரில் வந்திருக்கும் என்பன போல நினைத்து பதிவிறக்கம் செய்தேன். பொதுவாகவே நான் இதைப்போன்று பல ஆப்-களை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தி, பின்னர் அதனை நீக்கும் பழக்கம் உடைய நபராவேன்” என்றார்.

அதன் பின் “எனது பாஸ்கோட் டைப் செய்யுமாறு ஒரு பாப்-அப் தோன்றியது. அதில் எனது பாஸ்கோடை அழுத்திய உடனே எனது ஆப்பிள் பே (ApplePay) நான் $199 பரிவர்த்தனை செய்தேன் என்று எனக்குத் தெரிவித்தது.”

போலி ஆப்:

“நான் மிகவும் குழம்பி போனேன். முன்னதாக நான் பயன்படுத்திய டோடோக் ஆப் முற்றிலும் இலவசம். இல்லாவிட்டாலும் ஒரு சாதாரண ஆப்-ற்கு அமீரக திர்ஹம்ஸ் மதிப்பில் 730 திர்ஹம்ஸ் செலவு செய்வது என்பது முட்டாள் தனமான ஒன்றாகும் என்பதை நன்கறிவேன். உடனே நான் அந்த ஆப்-ஐ பயன்படுத்த முயன்றேன். அதனுள் நுழைந்ததும் தான் நான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. அதில் வெறும் ஒரு வெற்று நீல பக்கம் (Empty Blue page) மட்டும் தான் இருந்தது.

totok chat fake

“அதனுள் எதுவும் செய்ய முடியாது. மேலும் விசாரித்தேன். அந்த ஆப்-ன் விவரங்களில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் பார்த்ததில், அதன் பயன்பாடு ரஷ்யாவிலிருந்து வருகிறது என்பது எனக்கு தெரிய வந்தது.”

பின்னர் அந்த நபர் ஆப் ஸ்டோரிற்கு சென்று அந்த ஆப்-ன் மதிப்புரைகளை (reviews) படித்துள்ளார். அதில் “IT’S A SCAM. DO NOT DOWNLOAD” மற்றும் “இந்த பயன்பாடு ஒரு மோசடியானது. முதலில் இது இலவசம் 0.00 aed என்று கூறியது. ஆனால் நான் அதை பதிவிறக்கம் செய்த பிறகு, எனது ஆப்பிள் பே கணக்கிலிருந்து $200 பறிபோனது” என்று இருந்ததை கண்டதும் அந்த நபர் அதிர்ச்சியடைந்தார்.

வங்கியில் விசாரணை:

பின்னர் இது ஒரு சாதாரணமான விஷயம் இல்லை என்பதை உணர்ந்த நான் உடனே எனது வங்கியை அழைத்தேன். அதற்கு அவர்கள் “நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயற்சிக்க ஆப்பிள் நிறுவனம் அல்லது அந்த குறிப்பிட்ட ஆப்-ஐ தான் தொடர்பு கொள்ள வேண்டும். அது வேலை செய்யவில்லை என்றால், எங்களை மீண்டும் அழைக்கவும், நாங்கள் உங்கள் கார்டை பிளாக் செய்து, பணத்தை திருப்பி பெற முயற்சி செய்கிறோம்” என்றனர்.

Bank_1703d90fc2c_large

ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மையம்:

பின்னர் பாதிக்கப்பட்ட நபர் ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் பரிவர்த்தனை செய்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அவர்கள் கூறியதால் செய்வதறியாது திகைத்து போனார்.

பின்னர் அவர் “அங்கு எனது புகார்களை மின்னஞ்சல் மூலம் ஆப்பிளின் இணையதளத்திற்கு அனுப்புமாறு பரிந்துரைத்தார்கள். நான் அவர்களுக்கு புகார் தெரிவித்த பிறகு “இந்த ஆப் இனி ஆப் ஸ்டோரில் இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.” என்ற பதிலை எனக்கு அளித்தார்கள்” என்றார்.

தற்போதய நிலவரப்படி பாதிக்கப்பட்ட நபரின் கார்டு பிளாக் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. அவரது பணத்தை அவர் திரும்ப பெறவில்லை. ஆனால் அவரது வங்கி அந்த பணத்தை பெற்று தருவதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

இதை போன்ற போலி ஆப்-ஐ கண்டு ஏமாறாமல், அதிகாரபூர்வமாக ஆப் ஸ்டோரில் அதன் பயன்பாடு வரும்வரை ஆப்பிள் பயனர்கள் காத்திருப்பது மிகவும் நன்றாகும்.

Loading...