UAE Tamil Web

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்பும், AlHosn அப்ளிகேஷனில் ஸ்டேட்டஸ் தெரியவில்லையா? என்ன காரணம்..!

CoronaVaccine

துபாய்: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களின் AlHosn அப்ளிகேஷனில் தங்க நிறத்திலான நட்சத்திரம் அல்லது E என்ற எழுத்து தெரியும். இதனைக் காண்பித்து அபுதாபி எல்லையில் விதிக்கப்பட்டுள்ள பயண விதிமுறைகளில் விலக்குப் பெறலாம்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் எடுத்துக்கொண்ட நாளில் இருந்து 28 வது நாள் அவர்களது AlHosn அப்ளிகேஷனில் ஸ்டேட்டஸ் வழங்கப்படும்.

அப்படி, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்ட சிலர் தங்களுக்கு இந்த ஸ்டேட்டஸ் தெரியவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். எதனால் இந்த சிக்கல் ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம். அதற்குமுன் இந்த AlHosn அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் என்றால் என்ன சங்கதி என்பதை பார்த்துவிட்டுப் போகலாம்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு, அவர்களுடைய AlHosn அப்ளிகேஷனில் சிறப்பு அந்தஸ்தை குறிக்கும் விதமாக ஸ்டேட்டஸ் ஒன்று வழங்கப்படும். அபுதாபிக்குள் நுழைய நெகட்டிவ் PCR சான்றிதழை வைத்திருக்கவேண்டும் என்ற விதிமுறையில் இருந்து இந்த சிறப்பு அந்தஸ்து கொண்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

யாருக்கெல்லாம் சிறப்பு அந்தஸ்து உண்டு?

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் தன்னார்வலர்களுடைய AlHosn ஆப்பில் தங்க நிறத்திலான நட்சத்திரம் திரையில் தோன்றும்.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட தனிநபர்களுடைய AlHosn ஆப்பில் E என்ற எழுத்து திரையில் தோன்றும்.

எப்படி ஸ்டேட்டஸ் வழங்கப்படுகிறது?

அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சுகாதாரத்துறை கடந்த ஜனவரி 17 ஆம் தேதி, அபுதாபியில் நுழைய விதிவிலக்கு அளிக்கப்படுவது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், ஒவ்வொரு வாரமும் PCR பரிசோதனை எடுத்துக்கொண்டால் மட்டுமே ஸ்டேட்டஸ் AlHosn அப்ளிகேஷனில் இருக்கும். ஏழு நாட்களுக்கு மட்டுமே, அந்த ஸ்டேட்டஸ் நீடிக்கும். மீண்டும் தோன்றவேண்டுமானால் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஜனவரி 30 ஆம் தேதி அபுதாபி ஊடக அலுவலகம், வெளியிட்டுள்ள செய்தியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சுருக்கமாக சொன்னால், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு 28 நாட்கள் கழித்து உங்களுடைய AlHosn அப்ளிகேஷனில் ஸ்டேட்டஸ் (தங்க நட்சத்திரம் அல்லது E) தோன்றும். வாரமொருமுறை PCR பரிசோதனை எடுத்துக்கொண்டால் இந்த ஸ்டேட்டஸ் நீடிக்கும். இல்லையேல் மறைந்துவிடும்.

CoronaVaccine
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap