அமீரகத்தில் 37 வருட சேவைக்குப் பிறகு மார்ச் 24 அன்று ஷார்ஜா இந்தியன் பள்ளியின் ஆசிரியை சஜினி நாராயணன் மேனன் ஓய்வுபெற உள்ளார்.
மேனன் திருமணமான உடனேயே அமீரகத்திற்கு வந்து, செப்டம்பர் 24, 1985 இல் ஹிந்தி ஆசிரியராகப் பள்ளியில் சேர்ந்தார்.
இது குறித்து தெரிவித்த மேனன், “என் அப்பா ராணுவத்தில் இருந்தார், பள்ளி நாட்களில் நாங்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்தோம். பள்ளியில் எனக்கு பயிற்றுவிக்கும் மொழி ஹிந்தி. ஆங்கிலம் ஒரு சிறப்பு மொழியாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. பின்னர் ஷார்ஜா இந்தியன் பள்ளியில் முதல் தென்னிந்திய ஹிந்தி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன்” என்று மேனன் தெரிவித்தார்.
“இப்போது நான் மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் உணர்கிறேன். இத்தனை வருடங்கள் இங்கு ஆசிரியராக பணியாற்றிவிட்டு ஓய்வுபெறுவதால் என் வாழ்க்கை முழுவதுமாக மாற உள்ளது. எனது மாணவர்கள் என் வாழ்க்கையில் ஒரு பெரிய பகுதியாக உள்ளனர், நான் மாணவர்களுக்கு பெற்றோராக இருந்தேன், ஆசிரியராக இல்லை, அவர்களின் அன்பை இழக்க போகிறேன்” என்றார் மேனன்.
வருங்கால ஆசிரியர்களை அர்ப்பணிப்புடன் இருக்குமாறும், மாணவர்களிடத்தில் நட்பு ரீதியான உறவைப் பகிர்ந்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
“உங்கள் மாணவர்களுக்கு நண்பராக இருங்கள். அது அவர்கள் சிறந்த மனிதர்களாக மாறவும் அவர்களுக்கு மனத்தாழ்மை உணர்வை ஏற்படுத்தவும் உதவும். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நடந்து கொள்வார்கள். ஒரு ஆசிரியர் முரட்டுத்தனமாக இருந்தால், அவர் மற்றவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். உங்கள் மாணவர்களை நீங்கள் எவ்வளவு மதிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்களிடமிருந்து உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
பாடத்திட்டத்தை முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம். மாணவர்-ஆசிரியர் பிணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கவும்” என்று மேனன் மற்றா ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அமீரகத்தில் கழித்த மேனன் அமீரகம் தான் தனது முதல் வீடு என்றும் கூறியுள்ளார்.