UAE Tamil Web

துபாய்: ‘பாலியல் தொழில் செய்யாவிட்டல் கொன்றுவிடுவேன்’.. பெண்ணை வழுக்கட்டயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது!

துபாயில் பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஆணுக்கும் பெண்ணுக்கும் 3 சிறைத் தண்டனை விதித்து துபாய் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் துபாயில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலில் வைக்கப்பட்டதாகவும், பாலியல் சேவைகளை வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை புகார் அறிக்கை தாக்கல் செய்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட நண்பரும் அவரது பெண் தோழியும் தன்னை விமான நிலையத்தில் இருந்து வரவேற்று, பல பெண்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றதாக  அதிகாரிகளிடம் கூறினார்.

விபச்சாரத்திற்காக இங்கு அழைத்து வந்ததாகவும், மறுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

பின்னர் தான் அவர்களிடம் இருந்து தப்பித்துவிட்டதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண் விசாரணையின் போது, ​​தான் வேறொரு எமிரேட்டுக்கு மாற்றப்பட்டதால் தப்பிக்க முடிந்தது என்று கூறினார். இதனால் அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முடிந்தது.

இதனை அடுத்து சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இரண்டு குற்றவாளிகளையும் புலனாய்வுக் குழு அடையாளம் கண்டு தேடுதல் வேட்டையை துவங்கியது.

தீவிர தேடலில் ஈடுபட்டுவந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இரண்டு குற்றவாளிகளையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

விசாரணையின் போது, ​​குற்றாவாளிகள் இருவரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துபாய் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் குற்றவாளிகளின் தண்டனைக் காலம் முடிந்த பிறகு நாடு கடத்தப்படவும் தீர்ப்பளித்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap