UAE Tamil Web

அமீரகம் வருவதற்கு முன் யாரெல்லாம் ICA விடம் அனுமதி பெறவேண்டும்? ICA வெளியிட்ட அறிவிப்பு..!

Airport

கொரோனா பரவல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் விலக்குவதாக அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்திருந்தது. பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் அப்போது வெளியிடப்பட்டன.

இதில் துபாய் தவிர்த்து பிற எமிரேட்டுகளைச் சேர்ந்தவர்கள் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) ஒப்புதல் பெற வேண்டும். மேலும், துபாயைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் வெளியுறவு மற்றும் குடியிருப்புக்கான தலைமை இயக்குனரகத்திடம் (GDRFA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அமீரகத்திற்கு வருவோரில் யாரெல்லாம் தங்களிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் ICA என  குறிப்பிட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் அமீரகத்தில் பெற்றவர்கள்.
  • இரண்டாவது தவணை எடுக்கப்பட்டு 14 நாட்களைக் கடந்தவர்கள்.
  • அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை வைத்திருப்பவர்கள்.

தடுப்பூசியில் இருந்து விளக்கு பெற்ற வகையினர்

  • அமீரகத்தில் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள்
  • கல்வித்துறையில் பணிபுரியும் குடியிருப்பாளர்கள்
  • அமீரகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
  • பெடரல் மற்றும் உள்ளூர் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர்
  • மருத்துவ சிகிச்சைக்காக அமீரகம் வர விரும்புவோர்
  • மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் விரும்புவோர்

மேற்கண்ட அனைவரும் கண்டிப்பாக ICA ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICA மற்றும் GDRFA ஒப்புதல் பெறுவது குறித்து அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Airport
6 Shares
Share via
Copy link