UAE Tamil Web

ICA ஒப்புதலுக்கு எளிதாக விண்ணப்பிப்பது எப்படி..? – இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து UAE வருபவர்கள் கவனம்..!

ICA

ஒருவழியாக இந்தியர்களுக்கு மாதக்கணக்கில் பூட்டப்பட்ட தனது கதவுகளை அமீரகம் திறந்திருக்கிறது. ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்த பயணத்தடையால் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், உகாண்டா, நைஜீரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமீரக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தடையை விலக்கியிருக்கிறது. அதன்படி, மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் வர ICA விடம் விண்ணப்பிக்கலாம். தடுப்பூசி சான்றிதழை பயணிகள் வைத்திருக்க வேண்டும்.

இதனையடுத்து, பயணிகளின் தடுப்பூசி, கொரோனா பரிசோதனை விபரம் ஆகியவை குறித்து தகவல்களைப் பெற ICA வின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ICA வின் ஒப்புதலைப் பெறுவது எப்படி என பயணிகள் குழம்பிவருகின்றனர். அதனை நிவர்த்தி செய்யவே இந்தப் பதிவு. எப்படி ICA தளத்தில் ஒப்புதல் கோரி விண்ணப்பிக்கவேண்டும் என படிப்படியாக கீழே விளக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து அமீரகம் வர விண்ணப்பிப்பவர்களும் இதே வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1.பயணியின் தகவல்களை உள்ளீடு செய்யவும்

ICA

மேலே கொடுக்கப்பட்டுள்ள ICA வின் இணையதளத்திற்குள் சென்று அமீரகம் வரும் பயணியின் தகவல்களை நிரப்ப வேண்டும். இதில் பயணியின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், அமீரகத்திற்கு வருகைதரும் விமான நிலையம், புறப்படும் நாடு, பயணியின் மின்னஞ்சல் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

 

பயணி குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு இப்போது QR கோட் ஒன்று வரும். தகவல்கள் சரிதானா என்பதை பயணி சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

2.பாஸ்போர்ட் தகவல்களை உள்ளீடு செய்யவும்

ICA 2

பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் வகை, வழங்கப்பட்ட நாடு, செல்லுபடியாகும் தேதி, வழங்கப்பட்ட தேதி ஆகிய தகவல்களை உள்ளீடு செய்யவும்.

3. அமீரக முகவரியை உள்ளீடு செய்யவும்

ICA 3

அமீரகத்தில் பயணியின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை குறிப்பிடவும்.

4. தடுப்பூசி மற்றும் PCR பரிசோதனை தேதிகளை உள்ளீடு செய்யவும்

ICA 4

நீங்கள் எடுத்துக்கொண்ட தடுப்பூசி வகை, முதல் டோஸ் எடுத்த தேதி, இரண்டாம் டோஸ் எடுத்துக்கொண்ட தேதி, மூன்றாம் டோஸ் எடுத்துக்கொண்ட தேதி (எடுத்தவர்கள் மட்டும் குறிப்பிட்டால் போதும்) பின்னர், PCR பரிசோதனை எடுத்துக்கொண்ட தேதி, முடிவுகளைப் பெற்ற தேதி ஆகியவற்றை உள்ளிடவும். (பட்டியலில் உள்ள ஆஸ்ட்ரா ஜெனக்காவும் கோவிஷீல்டும் ஒன்று என்பதை ஏற்கனவே அமீரக அரசு விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது)

5.பயண விபரத்தை உள்ளீடு செய்யவும்

ICA 5

பாஸ்போர்ட், தடுப்பூசி சான்றிதழ், பயணியின் புகைப்படம் ஆகியவற்றின் நகல்களை உள்ளீடு செய்யவேண்டும். தடுப்பூசி சான்றிதழை இணைக்கவும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

6. உறுதிமொழி

ICA 6

கொரோனாவைக் கட்டுப்படுத்த அமீரக அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிப்பது மற்றும் மேற்கூரியா தகவல்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டு SEND ஐ கிளிக் செய்யவும்.

ICA
70 Shares
Share via
Copy link
Powered by Social Snap