UAE Tamil Web

காலாவதியான ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி..? – ICA விளக்கம்..!

VISA

வெளிநாட்டவர்களுக்கான அமீரக நுழைவு அனுமதி மற்றும் ரெசிடென்சி விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) சார்பில் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகப் பரவிவருகிறது.

இந்நிலையில் அப்படியான எந்த செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என ICA விளக்கமளித்துள்ளது. அந்த போலி செய்தியில் குறிப்பிட்டுள்ள இறுதித் தேதி தங்களுடைய பழைய அறிவிப்புகளில் ஒன்று எனவும் ICA தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற போலியான செய்திகளை நம்பவேண்டாம் எனவும் அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிடப்படும் செய்திகளை பின்பற்றுமாறும் ICA தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர்களுக்கான விதிமுறைகள் அமீரகத்தில் கடுமையான முறையில் பின்பற்றப்பட்டுவருவதாகவும் ICA நினைவுபடுத்தியுள்ளது.

VISA
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap