எமிராட்டி பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடியின் புதிய வடிவமைப்புக்கு சமீபத்தில் அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் எமிராட்டி பாஸ்போர்ட்டின் புதிய வடிவமைப்பு குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை ICA மறுத்துள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அமீரக பாஸ்போர்ட் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
புதிய எமிராட்டி பாஸ்போர்ட் மின்னணு அட்டை வடிவத்தில்(electronic card) வர உள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானவை என ICA கூறியுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ICA, இரண்டாம் தலைமுறை அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகள் முந்தைய பதிப்பிலிருந்து உருவாக்கப்பட்ட ஆவணங்களாகவே இருக்கும். புதிய வடிவமைப்பில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் அடங்கியிருக்கும் என்று விளக்கமளித்துள்ளது.
ஒரு சில போலி படங்களுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று இதன் மூலம் ICA தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய வடிவிலான பாஸ்போர்ட் வழங்கல் செயல்முறைகள் விரைவில் தொடங்கும் என்று ICA குறிப்பிட்டுள்ளது. சமூக ஊடங்கங்களில் பரப்பப்படும் இதுபோன்ற வதந்திகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்றும், ICA-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகள் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து உண்மையான தகவல்களைப் பெற வேண்டும். போலி செய்திகளைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.