UAE Tamil Web

கொஞ்சம் ஜாலியா இருந்துட்டு வாங்க.. தனது தொழிலாளர்களுக்கு இந்தியா – பாகிஸ்தான் T20 போட்டிக்கான டிக்கெடை இலவசமாக வழங்கும் துபாய் தொழிலதிபர்..!

RDS_211020_100-tickets-to-witness-T20-Cricket-World-Cup-live-for-blue-collar-employees-

லீவும் கொடுத்து, போக்குவரத்து, சாப்பாடு ஆகியவற்றை அளித்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான T20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டையும் தனது தொழிலாளர்களுக்கு வழங்கிவருகிறார் டான்யூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனிஸ் சாஜன்.

“கடினமான சூழ்நிலையிலும் மணிக்கணக்கில் பணிபுரிந்துவரும் தனது தொழிலாளர்களுக்கு ஓய்வையும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்த நினைத்தேன். அதற்காகவே இந்த முடிவை அறிவித்துள்ளேன்” என்கிறார் சாஜன்.

24 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான 100 டிக்கெட்டுகள், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டிக்கான 100 டிக்கெட்டுகள், குவாலிபயர் (இந்தியா vs A2 ) போட்டிக்கான 100 டிக்கெட்டுகளை சாஜன் வாங்கியிருக்கிறார். தனது நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களுக்கு இந்த டிக்கெட்கள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேட்ச் நடைபெறும் அன்று பாதி நாள் விடுமுறையும் உணவு பாக்கெட் மற்றும் போக்குவரத்து ஆகியவையும் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்துதரப்படும் என சாஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாஜன் பேசுகையில்,” 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியதில் இருந்து நான் கிரிக்கெட்டை ஆர்வமாக பார்க்கத் துவங்கினேன். இன்று வரை அப்படித்தான். கொரோனா போன்ற சூழ்நிலையிலும் தாக்குப்பிடித்து எங்களது நிறுவனம் வெற்றி நடைபோடுகிறது எனில் அதற்கு முழு காரணமும் எங்களது தொழிலாளர்கள் தான். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியது என்னுடைய கடமை. ஆகவே தான் இந்த முடிவு” என்றார்.

நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நேரலையில் ஒளிபரப்பப்படும் எனவும் சாஜன் தெரிவித்துள்ளார்.

RDS_211020_100-tickets-to-witness-T20-Cricket-World-Cup-live-for-blue-collar-employees-
8 Shares
Share via
Copy link