ரமலான் மாதத்தில் துபாயின் பிரபல குளோபல் வில்லேஜ் அதன் நேரத்தை நீட்டித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் நீண்ட நேரம் குளோபல் வில்லேஜை ரசிக்க இயலும்.
இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவில், குளோபல் வில்லேஜ் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை செயல்படும் என்று அறிவித்துள்ளது.
ரமலானின் போது, அமீரகம் மற்றும் பரந்த பிராந்தியத்தின் கலாச்சாரம், ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குகளுடன் முக்கிய பன்முக கலாச்சார வசதிகளுடன் இப்தார் மற்றும் சுஹர் உணவுகள் வழங்கப்படும்.
நோன்பாளிகள் நோன்பு திறந்த பிறகு குளோபல் வில்லேஜ் முழுவதும் உள்ள பலவகையான உணவு வகைகளையும் தனித்துவமான இப்தார் மற்றும் சுஹரையும் சுவைப் பார்கலாம், அதே நேரத்தில் பாரம்பரிய பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.