அமீரகத்தில் சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்தி – துபாய் போலிஸ் மறுப்பு!

A photo that went viral on social networking sites in the UAE has caused confusion among residents.

அமீரக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்தியை தவிர்க்க வேண்டும், என்று துபாய் போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படம், அமீரக வாசிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகைப்படத்தை துபாய் போலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் சவூதி நாட்டை சேர்ந்த ஒருவரின் போக்குவரத்து அபராதத்தை தள்ளுபடி செய்தது போல் கடிதம் ஒன்று போலியான தகவலை கொண்டிருந்தது.

அந்த கடிதத்தில் அன்பான ஓட்டுனரே நீங்கள் எங்கள் நாட்டின் விருந்தினராக வந்துள்ளீர்கள். உங்கள் பயணம் சிறப்பாக அமைந்ததாக நம்புகிறோம் என்றும், நீங்கள் வேகமாக வாகனத்தை ஓட்டி போக்குவரத்து விதி மீறல் செய்துள்ளீர்கள் என்றும், இந்த குற்றத்திற்காக நாங்கள் உங்கள் அபராதத்தை தள்ளுபடி செய்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு துபாய் போலிஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. நாங்கள் எந்த போக்குவரத்து அபராதத்தையும் தள்ளுபடி செய்யவில்லை, என உறுதிபடுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இது போன்று வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று துபாய் போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக துபாய் போலிஸ் தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலாக இருந்தாலும் வெளியாகும், எனவும் கூறியுள்ளது.

3 மாதங்கள் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடாத நபர்களுக்கு அவர்களின் அபராதத்தில் இருந்து 25% தள்ளுபடியும், 6 மாதத்திற்கு 50% தள்ளுபடியும், 9 மாதத்திற்கு 75% தள்ளுப்படியும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

ஒரு வருடத்திற்கு போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடாதவர்களுக்கு அபராதத்திலிருந்து 100% தள்ளுபடியை பெற முடியும், என துபாய் காவல்துறையின் தலைமை அதிகாரி அப்துல்லா கலீஃபா அல் மெர்ரி தெரிவித்துள்ளார்.

Loading...