UAE Tamil Web

துபாய் EXPO 2020-இல் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் இளையராஜா

துபாய் Expo 2020 கண்காட்சிக்கு இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக விருப்பமான இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு இந்திய என பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான திரைப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

இந்த நிலையில் தற்போது துபாயில் நடந்து வரும் பிரம்மாண்ட துபாய் Expo 2020 கண்காட்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி வருகிற மார்ச் மாதம் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த பதிவில், ‘வணக்கம் துபாய் Expo 2020. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் விரும்பும் இசைகளால் உங்களை அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். துபாய் Expo 2020, மார்ச் 5 ஆம்தேதி இரவு 9 மணிக்கு, ஜூபிலி பார்க்கில் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

 

16 Shares
Share via
Copy link