துபாயில் உரிமம் பெறாத மசாஜ் சென்டர்கள் குறித்து பொதுமக்களுக்கு துபாய் காவல்துறை விழிப்புணர்வை பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் ஜமால் சலீம் அல் ஜலாஃப் கூறுகையில், மசாஜ் சென்டர்களின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உரிமம் பெறாத வணிகம் நடத்துபவர்கள், வாகனங்களில் மசாஜ் அட்டைகள் விநியோகிப்பவர்கள் ஆகியோரை கண்காணித்து கைது செய்யவும் துபாய் காவல்துறை தீவிரமக உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.
“வாகனத்தில் மசாஜ் அட்டைகள் விநியோகிப்பது சட்டவிரோத வணிகங்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி பொது ஒழுக்கத்தை மீறி அநாகரீகமான ஆபாச படங்களையும் கொண்டிருக்கின்றன. வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் தெருக்களை நாசப்படுத்தும் இந்த நாகரீகமற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வியக்க உள்ளோம்” என்றார்.
மேலும் சட்டவிரோத மசாஜ் சென்டர்கள் வைத்திருப்பவர்களை ஜமால் சலீம் எச்சரித்தார். சட்டவிரோத மசாஜ் சென்டர்கள் வைத்திருப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று வருடங்களாக துபாய் காவல்துறையின் முயற்சியால் சாலையில் கிடக்கும் மசாஜ் அட்டைகளில் காணப்பட்ட 3,114 தொலைபேசி எண்களின் சேவைகளைத் துண்டித்து, சட்டவிரோத வணிகப் பயன்பாடாக உபயோகிக்கப்ப்ட்ட 218 அடுக்குமாடி குடியிருப்புகளை சோதனை செய்து, 2,025 பேரைக் கைது செய்துள்ளனர்.
அரசின் உரிமம் பெறாத மசாஜ் சென்டர்கள் மற்றும் அவற்றின் விளம்பரதங்களில் ஏதெனும் சந்தேகம் எழுந்தால், 901 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் அல்லது துபாய் போலீஸ் ஸ்மார்ட் ஆப் மூலம் புகார் அளிக்கலாம்.