UAE Tamil Web

துபாயில் கந்தூரா அணிந்து சிஐடி போல ஏமாற்றிய கும்பல்.. தனியார் நிறுவன உரிமையாளரைத் தாக்கி 365,000 திர்ஹம்ஸ் கொள்ளை!

துபாயில் பண பரிவர்த்தனை நிறுவனத்தின் உரிமையாளரையும் அவரது நண்பரையும் தாக்கி பணத்தை கொள்ளை அடித்த ஆசிய நாட்டை சேர்ந்த ஆறு குற்றவாளிகளுக்கு குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

இந்த கொள்ளை கும்பல், சிஐடி அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல், தங்கச் சிலை, தொலைபேசிகள் மற்றும் வங்கி அட்டைகளைத் திருடி வந்துள்ளனர். தற்போது பண பரிவர்த்தனை நிறுவனத்தின் உரிமையாளரையும் அவரது நண்பரையும் தாக்கி 365,000 திர்ஹம்ஸை கொள்ளையடித்துள்ளனர்.

இது குறித்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பலை போலீசார் அடையாளம் கண்டனர். அதில் கந்தூரா (அரபு நாட்டின் பாரம்பரிய உடை) அணிந்து சிஐடி போல பண பரிவர்த்தனை நிறுவனத்திற்குள் நுழைத்து 365,000 திர்ஹம்ஸை கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அந்த கும்பலில் 4 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில், நீதிமன்றத்தில் ஆஜரான 4 பேருக்கும், ஆஜராகாத இருவருக்கும் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதற்காகவும், துபாய் காவல்துறையின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காகவும், மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 900 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap