துபாய்: ஜெபல் அலி தொழிற்சாலை பகுதியில் எண்ணெய் கழிவுகளை வைத்திருக்கும் கிடங்கில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து துபாய் சிவில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து தொழிற்சாலைகள் தூரமாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் கழிவுகளில் தீப்பற்றியதால் அந்தப் பிராந்தியமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

