துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஃபால்கன் சீசனில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார்.
ராஜாளிப் பறவை எனப்படும் ஃபால்கன் வளர்ப்பது அமீரகத்தின் முக்கிய நாகரீகமாக பார்க்கப்படுகிறது. அரச குடும்பத்தின் பல உறுப்பினர்கள் அவ்வப்போது தங்களுக்குப் பிடித்தமான பறவைகளோடு வெளியே செல்வது வழக்கம்.
துபாய் இளவரசரைப் பொறுத்தவரையில் அவர் அடிக்கடி உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்துவருகிறார். ஒவ்வொரு முறையும் தனது விருப்பத்திற்குரிய பறவைகளை தன்னோடு கூட்டிச் செல்வது குறிப்பிடத்தக்கது. இம்முறை தனது உஸ்பெகிஸ்தான் பயணப் புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளவரசர் பதிவிட்டுள்ளார்.
புகைப்படங்கள்




