UAE Tamil Web

இந்தியா-அமீரகம் இடையே பொருளாதார ஒப்பந்தம்.. மே மாதம் முதல் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முடிவு

இந்தியா மற்றும் அமீரகம் இடையே பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் நவரத்தின மற்றும் ஆபரண துறையினர் ஒரு ஆண்டுக்குள் ஏற்றுமதி இலக்கை 7.60 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய வர்த்தகதுறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு துறை உறுப்பினர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது: வரக்கூடிய ஆண்டுகளில் இந்த துறையினர் ஏற்றுமதி இலக்கை 7.6 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசு இந்த துறையின் ஏற்றுமதிக்கான வளர்ச்சி வாய்ப்புகளை அமீரகம் மற்றும் உலகின் பிற நாடுகளில் ஏற்படுத்தி கொடுக்கும்.

இந்தியா மற்றும் அமீரகம் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் மே மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஜவுளி, மருந்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap