UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்து மீண்டும் துவக்கம் – விதிமுறைகள் என்னென்ன?

Stock-Abu-Dhabi-airport-passengers_

ஜூன் 23 ஆம் தேதிமுதல் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் துபாய் வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் பயணிகள் அமீரக அரசு அங்கீகரித்திருக்கும் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருத்தல் வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பல கட்டுப்பாடுகளை ஆணையம் வெளியிட்டுள்ளது. அவை குறித்து கீழே காணலாம்.

  • அமீரக அரசு அங்கீகரித்திருக்கும் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருத்தல் வேண்டும்.
  • பயணிகள் தங்களது புறப்பாட்டிற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா (PCR Test) நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அமீரக குடிமக்களுக்கு இதில் விலக்கு உண்டு.
  • QR கோட் உள்ள PCR பரிசோதனை சான்றிதழ் மட்டுமே செல்லுபடியாகும்.
  • அனைத்து பிரயாணிகளும் தங்களது பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு ரேபிட் PCR டெஸ்ட் எடுத்திருத்தல் வேண்டும்.
  • துபாய் வந்திறங்கியதும் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவரும்வரையில் நிறுவன குவாரண்டைன் செய்துகொள்ளவேண்டும். இந்த முடிவானது பொதுவாக 24 மணிநேரத்தில் வெளியாகும். அமீரக குடிமக்கள் மற்றும் ராஜாங்க அதிகாரிகளுக்கு இதில் விலக்கு உண்டு.

இந்தியா போன்றே தென்னாபிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் பயணிகள் ஜூன் 23 ஆம் தேதிமுதல் அமீரகம் வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stock-Abu-Dhabi-airport-passengers_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap