UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையே பயணத்தடை நீடிக்கிறது – எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-

இந்தியா – அமீரகம் இடையே பயணத்தடை நீடிப்பதாகவும் விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,”இந்தியாவில் அமீரகத்திற்கு எங்களுடைய விமானங்களை இயக்குவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. எங்களுக்கு சரியான பயண விதிமுறைகள் கொடுக்கப்பட்டவுடன் எங்களது சேவையை துவங்குவோம். அதன்பிறகு எங்களது இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம். ஆகவே, புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற எங்களது இணையதளத்தினை தொடர்ந்து பார்வையிடவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நிறுவனம்,” ஜூலை 6 ஆம் தேதிவரையில் இந்தியா – அமீரகம் இடையிலான பயணத்தடை நீடிக்கும். விமானங்களை மீண்டும் இயக்குவது குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தவுடன் அதனை வெளியிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 23 ஆம் தேதிமுதல் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் இந்தியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து துபாய் வரலாம் என துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

இருப்பினும், இந்தியாவின் ஏர் இந்தியா ஜூலை 6 ஆம் தேதிவரையில் பயணத்தடை நீடிக்கும் என பயணி ஒருவரின் கேள்விக்கு அந்நிறுவனம் டிவிட்டரில் பதிலளித்தது. இந்நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap