UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியாவிலிருந்து இன்னும் சில நாட்களில் அமீரகத்திற்கு விமான சேவை : எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!

emiratesboeing777

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப்போக்குவரத்து மீண்டும் எப்போது துவங்கப்படும் என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இரு நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்து ஜூலை 21 ஆம் தேதிவரையில் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

அதற்கு முன்னர் ஜூன் 23 ஆம் தேதி இந்தியா – அமீரகம் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், ஏர் இந்தியா மற்றும் துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூலை 6 ஆம் தேதிக்குப் பிறகு விமான சேவை மீண்டும் இயக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ட்விட்டரில் பயணி ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம்,” ஜூலை 7 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே விமான சேவையை மீண்டும் துவங்கலாம் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அரசிடம் இருந்து தெளிவான பயண விதிமுறைகள் வெளியிடப்படுவதற்காக காத்திருக்கிறோம். விரைவில் இதுகுறித்த புதிய தகவல்களை வெளியிடுவோம் என நம்புகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் டிக்கெட் முன்பதிவு தளத்தில் ஜூலை 7 ஆம் தேதி மும்பை – துபாய் விமான டிக்கெட் விற்பனையில் இருக்கிறது. எக்கானமி கிளாசில் ஒரு டிக்கெட்டின் விலை 43,683 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.

emiratesboeing777
198 Shares
Share via
Copy link
Powered by Social Snap