உலகம் முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா – அமீரகத்திற்கிடையேயான நல்லுறவு மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் (அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட்) நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் துபாய்க்கு கொண்டுவரப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் மூலம் அமீரகம் கொண்டுவரப்பட்டுள்ள இந்த கோவிட் தடுப்பூசிகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் அமீரகம் சென்றடைந்தது மூலம் சிறந்த நண்பர்களுக்கு இடையேயான நல்லுறவை இது பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Made in India vaccines reach Dubai. A special friend, a special relationship.#VaccineMaitri pic.twitter.com/HDrRXpoLd5
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 2, 2021
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் பவன் கபூரின் ட்வீட்டர் பதிவில், “நட்பு நாட்டை ஆதரிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் இந்தியா மற்றும் அமீரகத்திற்கு இடையே இருக்கும் சுகாதார (health care) கூட்டாண்மை மேலும் வலிமை பெறுவதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு திகழ்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.