துபாயில் கோலாகலமாக நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்போவில் 192 நாடுகள் தங்களது பெவிலியனை அமைத்துள்ளன. இதில் இந்தியாவின் பெவிலியனும் ஒன்றாகும். எக்ஸ்போ காரணமாக வெளிநாட்டிலிருந்து துபாய் வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக எக்ஸ்போ சிட்டிக்குள் கூட்டம் அலைமோதுகிறது. இந்திய பெவிலியனுக்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Another milestone achieved!
India Pavilion @Expo2020Dubai crosses 2,00,000+ footfall mark.👏
Come & explore the grand display of #IndiaAtDubaiExpo as it showcases our rich heritage & futuristic aspirations as a thriving hub full of limitless possibilities.🇮🇳 pic.twitter.com/0cR8bPV8mu
— Piyush Goyal (@PiyushGoyal) November 4, 2021
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இந்திய அமைச்சர் பியூஷ் கோயல்,” இந்திய பெவிலியன் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. துபாய் எக்ஸ்போவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய பெவிலியனுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. நம்முடைய பாரம்பரியமும் எதிர்கால திட்டங்களையும் வெளிப்படுத்தும் இடமான இந்திய பெவிலியனுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
