துபாயில் நடைபெற்றுவரும் பிரம்மாண்ட எக்ஸ்போ 2020 கண்காட்சியில் 192 நாடுகள் தங்களது பெவிலியன்களை அமைத்துள்ளன. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கிய இந்தக் கண்காட்சியில் இந்தியாவும் பெவிலியனை அமைத்துள்ளது.
நிகழ்ச்சி துவங்கிய இந்த 25 நாட்களில் இந்திய பெவிலியனுக்கு வருகைத்தந்த பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
துல்லியமாகச் சொல்வதென்றால் இதுவரையில் 1,28,000 பேர் இந்திய பெவிலியனுக்கு சென்றிருக்கிறார்கள். இதற்கு இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
India pavilion is the crown jewel of @Expo2020Dubai.
It has emerged as the most visited & liked pavilion with over 1,28,000 visitors in the first 25 days of the 6 month long event.
Massive footfalls are a testimony to the growing global interest in the New India story. pic.twitter.com/nK76JtOvOf
— Piyush Goyal (@PiyushGoyal) October 25, 2021
