UAE Tamil Web

இந்தியா – துபாய் விமான டிக்கெட்களின் விலை கிடுகிடு உயர்வு!

uae-expats,-uae-flights,-india-flights,-coronavirus,-covid19

அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்திற்குள் நுழைய கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்தில் புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் இந்தியாவில் சிக்கித் தவித்த பலரும் அமீரகம் திரும்ப படையெடுத்து வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால் விமான டிக்கெட்களும் அதிகரித்துள்ளன. எமிரேட்ஸ், எதிஹாட் உள்ளிட்ட ஒரு சில விமான நிறுவனங்கள் மட்டுமே விமானங்களை இயக்குவதால் டிக்கெட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி, பிசிஆர் பரிசோதனை உள்ளிட்டவைகளிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அமீரகம் திரும்ப பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இருப்பினும் விமான டிக்கெட்களின் விலை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் சுமார் 1.70 லட்சம் பேர் ஆன்லைனில் இந்தியா – துபாய் இடையேயான விமான டிக்கெட்களை பார்த்திருப்பதாக டிராவல்ஸ் ஏஜென்சிகள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 5ம் தேதி எமிரேட்ஸ் விமானத்தில் இந்தியா – துபாய் இடையிலான பயண டிக்கெட் 800 திர்ஹம்ஸுக்கு விற்பனையான நிலையில், ஆகஸ்ட் 18ம் தேதிக்கான விமான டிக்கெட் 2000 திர்ஹம்ஸாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் விமான டிக்கெட்கள் விலை உயர்வால் பயணிகள் கடும் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர்

uae-expats,-uae-flights,-india-flights,-coronavirus,-covid19
5 Shares
Share via
Copy link