இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் பயணிகள் தங்களது பயணத்திற்கு 6 மணி நேரத்திற்குள் விமான நிலையத்திலேயே ரேபிட் PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போது வரையில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறிப்பாக அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு ரேபிட் PCR டெஸ்டில் இருந்து விலக்களிக்க வேண்டிய முயற்சிகளை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறைக்கு இந்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த ரேபிட் டெஸ்ட்டிற்கு 4000 ரூபாய் செலவாகும் என்பதால் இதிலிருந்து பயணிகளைக் காக்கும் நோக்கில் இந்த பரிந்துரையானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, விரைவில் இந்திய வெளியுறவுத்துறை இதுகுறித்து அமீரக அரசிடம் கோரிக்கை வைக்க இருப்பதாக இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
