UAE Tamil Web

இந்தியா – UAE இடையே மறுஅறிவிப்பு வரும் வரையில் பயணத் தடை நீடிக்கும்…!

NAT-INDIA-AIRPORT-

இந்தியா – அமீரகம் இடையேயான பயணத் தடை தொடர்ந்து அமலில் இருப்பதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (GCAA) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படுவதை முன்னிட்டு இருநாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது எனவும் மறு அறிவிப்பு வரும் வரையில் இது தொடரும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” இந்தியா – அமீரகம் இடையேயான பயணத்தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவின் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவில் இருந்து மீண்டும் பயணிகளை அமீரகத்திற்கு வர அனுமதிப்பது குறித்து சூழ்நிலையை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்துத்தடை விதிக்கப்பட்டது. பல்வேறு முறை இந்த அறிவிப்பு நீட்டிக்கப்பட்டு பின்னர் இறுதியாக ஜூன் 23 ஆம் தேதிமுதல் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் விமானங்களை இயக்க அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும் ஜூலை 6 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே பயணத்தடை அமலில் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன் விமானங்களை மீண்டும் இயக்குவது குறித்து அறிவிக்கப்படும் என இந்தியாவின் ஏர் இந்தியாவும் துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

NAT-INDIA-AIRPORT-
0 Shares
Share via
Copy link