அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதளை இந்திய சுகாதார நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அமீரகத்திரலிருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள் இதோ:
- விமானம் புறப்படும் 72 மணி நேர கொரோனா பரிசோதனை செய்த நெடடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- கொரோனா நெகடிவ் சான்றிதழை, சுய விபரத்துடன் Air Suvidha இணைய தளத்தில் பதிவேற்றவும். https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration
- கொரோனா தொற்றை கண்டறிய ஆரோக்யா சேது செயலியைப் பதிவிறக்கவும்.
- தெர்மல் ஸ்கிரீனிங்: விமான நிலையத்திற்கு வந்தவுடன் தெர்மல் ஸ்கிரீனிங் சோதனைக்கு பயணிகள் மேற்கொள்ளப்பபடுவார்கள். அந்த சோதனையின்போது அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நெறிமுறையின்படி மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
- ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, அதன் விலை விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
டெல்லி விமான நிலையத்தில்:
பிசிஆர் பரிசோதனை – ரூ. 500
ரேபிட் பிசிஆர் பரி சோதனை – ரூ 2,900
மும்பை:
ஜனவரி 17 முதல், அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டியதில்லை.
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில்:
ஆர்டி பிசிஆர் பரிசோதனை – ரூ 500
ரேபிட் பிசிஆர் பரிசோதனை – ரூ 1,975
பெங்களூரு
பெங்களூருக்குச் செல்லும் அனைத்து பயணிகளும் ஆரோக்யா சேது செயலி, தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு பயன்பாடு மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலைய செயலி ஆகியவற்றை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் பயணிகளின் பரிசோதனைச் செலவை பெங்களூரு சர்வதேச விமான நிலையம் ஏற்கும்.
ஜனவரி 11 முதல், அனைத்து பயணிகளும் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், 8வது நாளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.
கொல்கத்தா
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கான செலவு:
ஆர்டி பிசிஆர் பரிசோதனை – ரூ 600
ரேபிட் பிசிஆர் பரிசோதனை – ரூ 2,900
மேலும் அனைத்து சர்வதேச பயணிகளும் கொல்கத்தா சென்றவுடன் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.