இந்தியாவிற்கும் அமீரகத்திற்கு இடையே ஏற்பட்ட விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்தத் வா்த்தக ஒப்பந்தகத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பிற்கும் இடையேயான வா்த்தகம் ரூ.7,50,000 கோடியாக அதிகரிக்கும் என இந்திய அரசு எதிா்பாா்த்துள்ளது.
இந்தியா – அமீரகம் நாடுகளுக்கிடையேயான பொருளாதாரக் ஒப்பந்தத்தில் (CEPA) இருதரப்பும் கடந்த பிப்ரவரி, 18- ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம், மே – 1 ஆம் தேதியான அதிகாரப்பூா்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து மூன்றாவது முக்கிய வா்த்தகப் பங்கு நாடாக இருக்கும் அமீரகம், இந்தியப் பொருட்களுக்கு ஐந்து சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டு வந்தது.
அமீரகத்திற்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் நகை, ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மூலம், இந்தப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.