UAE Tamil Web

ஒரு விமான டிக்கெட்டின் விலை 1 லட்ச ரூபாய் : இந்தியா – அமீரகம் இடையே விமான டிக்கெட் தட்டுப்பாடு எதிரொலி..!

INDIA-AIRPORT-CHENNAI-

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்லும் வேளையில் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் அமீரகம் வர இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 11.59 மணிமுதல் அடுத்த 10 நாட்களுக்கு இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடைசி நேரத்தில் இந்தியாவில் இருந்து எப்படியாவது அமீரகம் வந்துவிடவேண்டும் என பல இந்தியர்கள் முயற்சித்துவருகின்றனர். நேரடியாக விமானங்களில் டிக்கெட் கிடைக்காததால் அமெரிக்கா, கனடா சென்று அங்கிருந்து அமீரகம் வரவும் அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா – அமீரகம் இடையேயான டிக்கெட் விலை தாறுமாறாக ஏறியுள்ளதாக நமது வாசகர்கள் தெரிவிக்கவே, எங்களது ஆசிரியர் குழு உண்மை நிலவரத்தை விசாரித்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினைத் தொடர்பு கொண்டோம். அவர்களது முன்பதிவு இணையதளம் முடங்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

பின்னர், பிரபல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இணையதளமான மேக் மை ட்ரிப் -ற்குச் சென்று பார்த்ததில் கிடைத்த தகவல் உண்மைதான் எனத் தெரியவந்திருக்கிறது.

Capture

இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நாளை (ஏப்ரல் 24) புது தில்லியில் இருந்து துபாய் வரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டிக்கெட் விலை 95,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

நாளை இரவு முதல் தடைகாலம் துவங்கும் நிலையில் விமானங்களின் டிக்கெட் விலை கிடுகிடுவென உயரும் என டிராவல் ஏஜெண்ட்கள் முன்பே தெரிவித்திருந்தனர்.

ஆனால் விமானத்தின் டிக்கெட் விலை ராக்கெட் அளவிற்கு எகிறும் என எதிர்பாராத மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

INDIA-AIRPORT-CHENNAI-
0 Shares
Share via
Copy link