UAE Tamil Web

அமீரகத்தின் இந்த 2 எமிரேட்களுக்கு வரும் இந்தியர்கள் 10 நாட்கள் குவாரண்டைன் இருக்க வேண்டும் – ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு..!

Air India express

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை விலக்கிக் கொள்வதாக நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால் மூன்று மாத பயணத்தடையை முடித்து இந்தியர்கள் இன்று முதல் அமீரகத்திற்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்களின் மூலமாக அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையத்திற்கு வரும் இந்தியர்கள் கண்டிப்பாக பத்து நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் காலங்களில் பயணிகள் கண்காணிப்பு சாதனம் அணியவேண்டும் எனவும் வந்திறங்கிய 4 & 8 ஆம் நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என தங்களது டிராவல் ஏஜென்ட்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ள சுற்றறிக்கையில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அறிவிப்பின்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

துபாய் மற்றும் ஷார்ஜா வருபவர்கள் வருகையின்போது கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் முடிவுகள் வெளிவரும் வரையில் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. அவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் தேவையில்லை.

ஆனால், அபுதாபி மற்றும் ரால் அல் கைமாவிற்கு வருபவர்கள் கட்டாயம் பத்து நாட்கள் குவாரண்டைன் இருக்கவேண்டுமென ஏர் இந்தியா அறிவித்திருப்பது இந்திய பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

Air India express
15 Shares
Share via
Copy link