UAE Tamil Web

இந்தியா – UAE விமானப் போக்குவரத்து : எகிறும் விமான டிக்கெட் விலை..!

Stock-India-airport-Indigo

ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவின் சில நகரங்களில் இருந்து அமீரகம் வர சில விமான நிறுவனங்கள் முன்பதிவைத் துவங்கியுள்ளன. இருப்பினும் அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விதித்த இந்தியா – அமீரகம் இடையிலான பயணத்தடை மறு அறிவிப்பு வரும்வரையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை 15 ஆம் தேதிக்கான எமிரேட்ஸ் விமான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஜூலை 16 ஆம் தேதி, பிசினஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் விமான டிக்கெட்டுகள் முறையே 148,900 ரூபாய் மற்றும் 165,353 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஃபிளை துபாய் விமான நிறுவனம், ஜூலை 27 ஆம் தேதி முதல் இந்தியா – அமீரகம் இடையேயான டிக்கெட் முன்பதிவை துவங்கியிருக்கிறது. இந்நிறுவனத்தின் இணையதளத்தின்படி எக்கானமி கிளாசில் ஒரு டிக்கெட்டின் விலை 33,892 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 16 ஆம் தேதியில் கோழிக்கோடு – துபாய் இடையேயான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஒரு டிக்கெட்டின் விலை 1,960 திர்ஹம்ஸ் ஆகவும் ஜூலை 17 ஆம் தேதி மங்களூர் – துபாய் இடையேயான விமான டிக்கெட் 2,092 திர்ஹம்ஸ் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Stock-India-airport-Indigo
0 Shares
Share via
Copy link