UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – துபாய் இடையிலான விமான டிக்கெட் முன்பதிவு துவக்கம்..!

NAT-INDIA-AIRPORT-

இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் இருந்து துபாய் வருவதற்கான விமான முன்பதிவினை சில விமான நிறுவனங்கள் துவங்கியுள்ளன.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் ஜூலை 15, 16 ஆம் தேதிகளுக்கான மும்பை – துபாய் டிக்கெட்கள் சில காலியாக இருக்கின்றன. ஒரு டிக்கெட்டின் விலை 895 திர்ஹம்ஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஜூலை 16 ஆம் தேதிக்கு, இண்டிகோ விமான நிறுவனமும் கனெக்டிங் விமானத்திற்கு 850 திர்ஹம்ஸ் கட்டணமும் நேரடி விமானத்திற்கு 1100 திர்ஹம்ஸ் கட்டணமும் வசூலிப்பதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா – அமீரகம் இடையேயான விமான சேவைகள் மீண்டும் துவங்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில் தற்போது இரு நிறுவனங்களும் முன்பதிவைத் துவங்கியிருப்பது இந்தியாவில் சிக்கிக்கொண்ட பல அமீரக வாழ் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

முன்னதாக இரு நாடுகளுக்கிடையேயான விமான சேவைகள் ஜூலை 15 ஆம் தேதி மீண்டும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NAT-INDIA-AIRPORT-
0 Shares
Share via
Copy link