UAE Tamil Web

விமானத்தின் 180 சீட்டும் காலி; 3 பேருக்காக இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்பட்ட விமானம்..!

haritha

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் திரும்பலாம் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்தது நினைவிருக்கலாம்.

ஆனால், அதற்கு முன்பே மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அமீரகம் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஹரிதா போது அவரது கணவர் ஸ்ரீனி ரெட்டி மற்றும் அவரது மகன் சஞ்சித் ரெட்டி ஆகியோர் ஆகஸ்டு 3 ஆம் தேதியே அமீரகம் திரும்பியுள்ளனர்.

பல்வேறு முறை இரு நாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்துத்தடை நீட்டிக்கப்பட்டு வந்ததால், 6 முறை டிக்கெட் முன்பதிவு செய்து பின்னர் கேன்சல் செய்திருக்கிறார் ஹரிதா. கோல்டன் விசாவும் இல்லை என்பதால் அமீரகம் திரும்புவது சிரமமாகியிருக்கிறது.

டாக்டர். இஸ்மாயில் ஹெல்த்கேர் குரூப் நிறுவனத்தில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் ஹரிதா, ஏர் அரேபியாவிடம் அமீரகம் திரும்ப உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். ஸ்ரீனி ரெட்டி, டெக் மகேந்திராவின் அமீரகத்திற்கான தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இந்தியா சென்றிருக்கிறார் ஹரிதா. ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் இந்தியாவிலிருந்து அமீரகம் வர பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்தக் குடும்பத்தினால் அமீரகம் திரும்ப முடியாமல் போயிருக்கிறது.

இந்நிலையில் இவர்களுக்கு உதவ ஏர் அரேபியா ஒப்புக்கொண்டிருக்கிறது. மருத்துவர்களை அமீரகம் அழைத்துவர அமீரக அரசிடம் சலுகை பெற்று, ஆகஸ்டு 3 ஆம் தேதி விமானத்தையும் இயக்குவதாக விமான நிறுவனம் அறிவித்தது.

இதனால் 180 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஹரிதாவின் குடும்பத்தினர் 3 பேர் மட்டும் அமீரகம் திரும்பியிருக்கிறார்கள். இந்தத் தம்பதியினர்  அமீரக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பைசர் தடுப்பூசியினை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“மாதக்கணக்கில் இந்தியாவில் சிக்கிக்கொண்ட எங்களை மீண்டும் அமீரகம் அழைத்துவர உதவிசெய்த, ஏர் அரேபியாவிற்கும் அனுமதி வழங்கிய அமீரக அரசிற்கும் நன்றி” என ஹரிதா தெரிவித்தார்.

haritha
4 Shares
Share via
Copy link