UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகம் வருபவர்கள் ஆறு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வர வேண்டும் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிவிப்பு

Stock-Air-India--airlines_

இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் பயணிகள் இந்தியாவில் தங்களது பயண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வருகை தரவேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக அறிவித்துள்ளது.

அமீரக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி பயணிகள் அனைவருக்கும் விமானம் புறப்படும் முன்னர் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை கவுண்டர்கள் விமான புறப்பாட்டு நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக திறக்கப்பட்டு பயண நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக மூடப்படும்.

ஆகவே கடைசி நேர பரபரப்பை தவிர்க்கும் நோக்கத்தில் பயணிகள் அனைவரும் தங்களது பயணத்துக்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வருகை தரும்படி ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது

Stock-Air-India--airlines_
3 Shares
Share via
Copy link