UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா, இலங்கையிலிருந்து அமீரகம் வருவோருக்கான புதிய பயண விதிமுறைகள் வெளியீடு..!

Dubai-Airport-1

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு வருவோர் பின்பற்றவேண்டிய பயண விதிமுறைகளை அமீரகத்தைச் சேர்ந்த பிளை துபாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று (ஆகஸ்டு 30) முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகளைக் கீழே காண்போம்.

  • துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்தருப்பவர்கள் துபாய் திரும்புவதற்கு முன்னர் GDRFA விடம் ஒப்புதல் பெறவேண்டும்.
  • துபாய் அல்லாத பிற எமிரேட்களில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருப்பவர்கள் அமீரகம் திரும்புவதற்கு முன்னர் ICA விடம் ஒப்புதல் வேற வேண்டும்.
  • GDRFA மற்றும் ICA ஒப்புதல் பெறுவது எப்படி எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
  • பயண நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா PCR சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் பரிசோதனை எடுக்கும் பரிசோதனை மையம் ICMR ஆல் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். சான்றிதழில் QR Code இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பயண நேரத்திற்கு 6 மணிநேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் ரேபிட் பரிசோதனை (molecular diagnostic testing) எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • 12 வயதுக்குட்பட்டோர் மற்றும் தீவிர மாற்றுத் திறனாளிகளுக்கு PCR பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • அமீரக நாட்டவர்கள் அவர்கள் எங்கிருந்து துபாய்க்கு வருகிறார்கள்/அவர்கள் தங்கியிருந்த நாட்களைப் பொறுத்து அவர்களுக்கும் PCR பரிசோதனையில் விலக்கு அளிக்கப்படும். இருப்பினும் துபாய்க்கு வந்திறங்கிய பின்னர் அவர்களுக்கு PCR பரிசோதனை எடுக்கப்படும்.
  • அமீரக நாட்டினரோடு துபாய்க்கு பயணிக்கும் அவருடைய முதல்நிலை உறவினர். மற்றும் அமீரகத்தைச் சேர்ந்த ஸ்பான்சர்/முதலாளியிடம் பணிபுரியும் வீட்டு பணியாளர்கள் ஆகியோருக்கு PCR பரிசோதனையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது (இவர்கள் கண்டிப்பாக அமீரக நாட்டினருடன் ஒரே விமானத்தில் பயணிக்கவேண்டும்)
  •  டிரான்ஸிட் பயணிகள் தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா PCR சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் பரிசோதனை எடுக்கும் பரிசோதனை மையம் ICMR ஆல் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். சான்றிதழில் QR Code இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பயணத்திற்கு முன்னரே தேவையான அனைத்து ஆவணங்களும் சரிப்பார்க்கப்படவேண்டும்.
  • நுழைவு/ டிரான்ஸிட்க்கான தேவையை பயணி பூர்த்தி செய்யவில்லை எனில் அவர் எங்கிருந்து பயணத்தைத் துவங்கினாரோ அங்கேயே திருப்பி அனுப்பப்படுவார்.
Dubai-Airport-1
8 Shares
Share via
Copy link