UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகம் வருபவர்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ்..!

Air_India_Reuters

இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்பும் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்தருப்பவர்கள் துபாய் திரும்புவதற்கு முன்னர் GDRFA விடம் ஒப்புதல் பெறவேண்டும்.
  • துபாய் அல்லாத பிற எமிரேட்களில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருப்பவர்கள் அமீரகம் திரும்புவதற்கு முன்னர் ICA விடம் ஒப்புதல் வேற வேண்டும்.
  • GDRFA மற்றும் ICA ஒப்புதல் பெறுவது எப்படி எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
  • துபாய் எக்ஸ்போ 2020 ஒருங்கிணைப்பாளர்களால் உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருந்தால் GDRFA அல்லது ICA ஒப்புதல் இல்லாமலேயே உங்களால் அமீரகம் வர முடியும்.
  • பயண நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா PCR சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் பரிசோதனை எடுக்கும் பரிசோதனை மையம் ICMR ஆல் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். சான்றிதழில் QR Code இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பயண நேரத்திற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் ரேபிட் பரிசோதனை (molecular diagnostic testing) எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இன்று வெளியிடப்பட்ட விதிமுறைகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் குறித்து எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. துபாய் வருபவர்கள் தடுப்பூசி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இருப்பினும் தடுப்பூசி எடுத்தவர்கள் அதற்கான சான்றிதழை பயணத்தின்போது எடுத்துவர பரிந்துரைக்கப்படுகிறது.
  • இந்திய விமான நிலையங்களில் எடுக்கப்படும் ரேபிட் கொரோனா பரிசோதனைக்கான கவுண்டர்கள் விமான புறப்பாட்டிற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே மூடப்படும் என்பதால் பயணிகள் பயண நேரத்திற்கு 6 மணிநேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்துவிடவேண்டும்.

அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா வருவோருக்கான விதிமுறைகளையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.

அபுதாபி வருவோர் கவனத்திற்கு:

  • 12 நாட்கள் வீட்டிலோ அல்லது நிறுவன குவாரண்டைனிலோ இருத்தல் வேண்டும்.
  • அபுதாபி வந்திறங்கிய 6 மற்றும் 11 ஆம் நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

ராஸ் அல் கைமா வருவோர் கவனத்திற்கு

  • 10 நாட்கள் வீட்டிலேயே குவாரண்டைன் இருத்தல் வேண்டும்.
  • வந்திறங்கிய 4 மற்றும் 8 ஆம் நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும்.
Air_India_Reuters
23 Shares
Share via
Copy link