UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையே விரைவில் மீண்டும் விமான சேவை – இந்தியத் தூதர் தகவல்..!

pawan Kapoor

அமீரகத்தில் உலகளாவிய முதலீட்டு மன்றம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமீரகத்திற்கான இந்தியத் தூதர் பவன் கபூர் இந்தியா – அமீரகம் இடையே வர்த்தக உறவு வலுவாக இருக்கிறது. விரைவில் இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும் என்றார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” கொரோனா காரணமாக இந்தியா – அமீரகம் இடையே பயணத்தடை அமலில் இருந்தாலும் சரக்குப் போக்குவரத்து இருநாடுகளுக்கு இடையேயும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டுவருகின்றன” என்றார்.

மீண்டும் விமான சேவைகள் துவங்கப்படும் என தெரிவித்த அவர்,” இந்தியாவில் கொரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என நம்புகிறோம். ஆகவே, அமீரக அதிகாரிகளுடன் பயணத்தடையை விலக்கிக்கொள்வது குறித்துப் பேசிவருகிறோம். இந்தியாவில் சிக்கிக்கொண்டுள்ள அமீரக ரெசிடென்ட் விசா வைத்திருக்கும் நபர்களை மீண்டும் அமீரகத்திற்கு வர அனுமதிப்பது குறித்து எங்களுக்கு உதவுமாறு அமீரக அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.”

“இருப்பினும் தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவினை அறிவித்திருந்தது. நிலைமை சீக்கிரம் சரியாகும் பட்சத்தில் விரைவில் கடந்தாண்டைப் போலவே ஏர் பபுள் மூலமாக இருநாடுகளுக்கிடையே விமானங்கள் இயக்கப்படும்” என்றார்.