அமீரகத்தில் பொருளாதார அமைச்சா் அப்துல்லா பின் தவுக் அல்மாரி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்துள்ளார்.
இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு, டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு அமீரக அமைச்சா் அப்துல்லா தலைமையிலான குழு டெல்லி வந்துள்ளது. அப்போது, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அப்துல்லா சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: இந்தியா- அமீரகம் இடையேயான வலுவான பொருளாதாரம் மற்றும் வா்த்தகத் தொடா்புகள் குறித்தும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக திட்டங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனா்.
உச்சி மாநாடு போன்ற தொடா்ச்சியான பரிமாற்றங்களும், இருதரப்பு சந்திப்புகளும் இந்தியாவின் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கச் செய்வதுடன் புதிய துறைகளைக் கண்டறிவதற்கு உதவிகரமாகவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.