UAE Tamil Web

இந்தியாவிலிருந்து இப்படிக்கூட அமீரகம் வரலாம் – ஏர் அரேபியா மூலமாக ஷார்ஜா வந்த 4 இந்தியர்கள்..!

RASHEETH FRIENDS

இன்று (ஜூலை 1, 2021) கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலமாக 4 இந்தியர்கள் ஷார்ஜா வந்தடைந்தார்கள். அமீரகத்தில் வசித்துவரும் ரஷீத் அப்பாஸ், முகமது குட்டி, ஃபரூக் மற்றும் நவுஷத் ஆகிய நான்குபேரும் சமீபத்தில் கேரளா சென்றிருக்கிறார்கள்.

இந்தியா – அமீரகம் இடையேயான பயணத்தடை காரணமாக இவர்களால் அமீரகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பயணத்தடையில் விலக்கு அளிப்பதாக அமீரக அரசு அறிவித்தது.

இதுகுறித்துப் பேசிய ரஷீத்,” தொழில், பங்குதாரர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான விசா வைத்திருப்போர் சரியான ஆவணங்கள் வைத்திருந்தால் அமீரகத்திற்கு வரலாம். நாங்கள் ஏர் அரேபியாவில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு, அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தில் (GCAA) பதிவு செய்தோம். இதற்கு கொரோனா தடுப்பூசி எடுத்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பாஸ்போர்ட், விசா, எமிரேட்ஸ் ஐடி ஆகியவற்றை அதிகாரிகளிடத்தில் சமர்ப்பித்தோம். நான்கு நாட்களில் எங்களுக்கு ஒப்புதல் கிடைத்தது. அதன்பிறகு ஏர் இந்தியாவில் டிக்கெட்டை முன்பதிவு செய்தோம்” என்றார்.

தாயகத்தில் சிக்கிக்கொண்ட அமீரக வாழ் இந்தியர்கள் பலருக்கும் இந்த முறை பற்றித் தெரிவதில்லை எனத் தெரிவித்த ரஷீத் இந்தப் பயணத்திற்கு தாங்கள் 8,500 திர்ஹம்ஸ் செலவு செய்ததாக தெரிவித்தார்.

“எங்களுக்கு மற்றொரு தேர்வும் இருந்தது. 22,000 திர்ஹம்ஸ் செலவில் எட்டு இருக்கைகள் கொண்ட தனி விமானம் கிடைத்தது. ஆனால் ஏர் இந்தியா விமான டிக்கெட் மலிவு விலையில் கிடைத்தது” என ரஷீத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் தனது மனைவியின் பிரசவத்திற்காக கேரளா சென்றிருந்த ரஷீத் மீண்டும் அமீரகம் வந்ததைப் பற்றிப் பேசியபோது,” விமான நிலையத்தில் சில பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். எங்களுடைய மொத்த பயண நடைமுறையும் நான்கு மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டது. ஷார்ஜா விமான நிலையத்தில் எங்களுடைய நெகட்டிவ் PCR டெஸ்ட் முடிவுகளை சமர்ப்பித்தோம். அங்கே மீண்டும் பரிசோதனைக்கு எங்களை உட்படுத்திக்கொண்டோம். 10 நாட்களுக்கான வீட்டு குவாரண்டைன் காலத்தின்போது அணிவதற்கான கண்காணிப்பு சாதனம் ஒன்று எங்கள் கைகைளில் கட்டப்பட்டது. குவாரண்டைனின் 3 மற்றும் 8 வது நாள் மீண்டும் நாங்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்” என்றார்.

RASHEETH FRIENDS
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap