UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு குறைவான விமானங்களே இயக்கப்படும் – ஏர் இந்தியா அறிவிப்பு..!

Air_India_Reuters

அமீரக அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகள் காரணமாக இந்தியா – அமீரகம் இடையே குறைவான விமானங்களே இயக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பயணி ஒருவரின் சந்தேகத்திற்கு பதிலளித்த அந்நிறுவனம்,”ஐக்கிய அரபு அமீரக அரசு அமல்படுத்திய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக துபாய்க்கான விமானங்கள் குறைக்கப்பட்ட அட்டவணைகளுடன் இயக்கப்பட இருக்கின்றன. உங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைவதற்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்திக்கொள்ளவும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (GCAA) ஏர்மேன் (NOTAM) க்கு அளித்துள்ள அறிக்கையில்,” ஜூலை 21, 2021 23:59 மணி வரையில் இந்தியா மற்றும் லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் விமானங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணத்தடை நீங்கியபிறகு ஏர் இந்தியா விமானங்கள் துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 1 ல் இருந்தும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் டெர்மினல் 2 ல் இருந்தும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத்தடை குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற தொடர்ந்து இணைந்திருங்கள்.

Air_India_Reuters
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap