UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத் தடையை நீட்டித்தது அரசு..!

Stock-India-airport-passengers

இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் அனைத்து பயணிகள் விமானத்திற்கும் ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு 11.59 முதல் 10 நாட்களுக்கு தடை விதிப்பதாக அமீரக அரசு முன்னர் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தத் தடையினை மே 14 ஆம் தேதிவரையில் அமீரக அரசு நீட்டித்திருப்பதாக டிராவல் ஏஜெண்ட்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணித்த யாரும் அமீரகத்தின் எந்தவொரு பகுதி வழியாகவும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல, இரு நாடுகளுக்கு இடையேயான கார்கோ விமானப் போக்குவரத்து இதனால் எவ்வித பாதிப்பும் அடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள், வணிக விமானங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் இந்தியா – அமீரகம் இடையே பயணிக்கலாம்.

இந்தியா – அமீரகம் இடையே பயணிக்க அனுமதிபெற்றவர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்பான 48 மணிநேரத்திற்குள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அதில் QR Code இருத்தல் வேண்டும்.

மேலும், 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அமீரகம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல், அமீரகத்திற்குள் நுழைந்த 4 மற்றும் 8 வது நாள் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல் ஆகிய கொரோனா விதிமுறைகளை சமரசமின்றி இவர்கள் கடைபிடிக்கவேண்டும்.

Stock-India-airport-passengers
0 Shares
Share via
Copy link