UAE Tamil Web

எங்களை மட்டுமாவது அமீரகம் வர அனுமதியுங்கள் : அமீரக அரசுக்கு கோரிக்கை வைக்கும் இந்தியாவில் சிக்கிக்கொண்ட ஆசிரியர்கள்..!

Stock-India-airport_

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் அமீரக அரசு தடை விதித்துள்ளது. இதனால் அமீரகத்தில் பணிபுரிந்து விடுமுறை உள்ளிட்ட காரணங்களுக்காக தாயகம் சென்ற இந்தியர்களால் மீண்டும் அமீரகம் வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

கோல்டன், சில்வர் விசா வைத்திருப்பவர்கள், அரசு பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களால் அமீரக திரும்ப முடியவில்லை.

இதனால் பலரும் வேலை பறிபோகும் அபாயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் அமீரகத்தில் இயங்கிவரும் இந்திய பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்களை மீண்டும் அமீரகம் வர அனுமதிக்குமாறு அமீரக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபுதாபியில் உள்ள இந்தியப் பள்ளிகளில் பணிபுரியும் 40 சதவீத ஆசிரியர்கள் இந்தியர்களாவர். விடுமுறை, இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா சென்ற இவர்களால் விமானத்தடை காரணமாக அமீரகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும், இந்த பணியாளர்களில் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் ஐடி பணியாளர்கள் அடங்குவர். அமீரகத்தில் கோடைகால விடுமுறைகள் முடிந்து ஆகஸ்டு 29 ஆம் தேதி பள்ளிகள் துவங்க இருக்கின்றன. அதற்குள் தங்களை அமீரகம் வர அனுமதிக்கக்கோரி இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த விஷயம் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும் விரைவில் நிலைமை சரியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

Stock-India-airport_
6 Shares
Share via
Copy link