UAE Tamil Web

செவிலியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லாலேட்டன் – அமீரகம் தனக்கு 2வது வீடு என உருக்கம்!

கோல்டன் விசா பெறுவதற்காக அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேரள திரை நட்சத்திரம் மோகன்லால் அபுதாபியில் உள்ள புர்ஜீல் மெடிக்கல் சிட்டிக்கு சென்று செவிலியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அங்குள்ள நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நீண்ட நேரம் செவிலியர்களுடன் கலந்துரையாடினார்.

சர்வதேச செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு நடந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் செவிலியர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமீரகம் வந்து நேரில் உரையாடலாம் என மோகன்லால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சொன்னது போலவே அவர் செவிலியர்களிடம் நேரில் கலந்துரையாடியது அவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லாலை பார்ப்பதற்காக வேண்டி துபாய், அல் அய்ன், ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் செவிலியர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து செவிலியர்களின் கேள்விக்கு மோகன்லால் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.

വാക്കു പാലിച്ച് മോഹൻലാൽ, നേരിട്ടെത്തി; ആശുപത്രി പശ്ചാത്തലമാക്കി സിനിമ, കയ്യടിച്ച് നഴ്സുമാർ

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் செவிலியர்களின் பணி அளப்பரியது என்றும் முன்களப் பணியாளர்களாக மக்களுக்கு சேவை புரிந்தது பாராட்டுக்குரியது எனவும் மோகன்லால் நெகிழ்ச்சியுடன் பேசினார். 40 ஆண்டுகளுக்கு முன்பே அமீரகம் வந்துள்ளதாக பேசிய மோகன்லால் இது தனக்கு 2வது தாய் வீடும் என தெரிவித்தார். இறுதியாக செவிலியர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மோகன்லால் விடைபெற்றார்.

2 Shares
Share via
Copy link