UAE Tamil Web

துபாய் ஏர்ஷோ : அமீரக வானில் சீறிப்பாய்ந்த இந்திய விமானங்கள்..!

tejasvi

துபாயில் கடந்த 14 ஆம் தேதி துவங்கிய துபாய் ஏர்ஷோ கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சுமார் 148 நாடுகளைச் சேர்ந்த ராணுவ போர் விமானங்கள், பயணிகள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இங்கே அணிவகுத்திருக்கின்றன. இதில் இந்தியாவின் விமானப்படையைச் சேர்ந்த தேஜஸ்வி மற்றும் சூரியாகிரண் விமானங்களும் அடக்கம்.

இந்த வண்ணமிகு கண்காட்சியை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துவங்கி வைத்தார்.

இந்நிலையில் இந்தியாவின் இலகுரக விமானமான தேஜஸ்வி மற்றும் சூரியாகிரண் ஆகிய விமானங்கள் இன்று அமீரக வானில் சீறிப்பாய்ந்து சாகசம் நிகழ்த்தின. இதனை பார்வையாளர்கள் அனைவரும் குதூகலத்துடன் கண்டுகளித்தனர்.

மேலும் இந்தியாவின் சாரங் வான்வெளி சாகசக்குழுவின் அதிரடி சாகசங்களை பல்வேறு மக்களும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap