UAE Tamil Web

இந்தியாவிற்கு 7 ராட்சத கண்டெய்னர்களில் ஆக்சிஜன் வழங்கிய அமீரகம்..!

c17 Aircraft

போக்குவரத்து வாகனங்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் இந்திய விமானப் படையின் C-17 விமானம் இன்று துபாய் வந்தடைந்தது. இதில் கிரையோஜெனிக் வடிவில் ஆக்சிஜனை எடுத்துச்செல்லகூடிய 7 ராட்சத கண்டெய்னர்கள் இருக்கின்றன.

“துபாயில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு மேற்கு வங்காளத்தின் பனகர் என்னும் இடத்திற்கு இன்று மாலை 5.30 மணியளவில் விமானம் வந்துசேரும்” என இந்திய விமானப்படை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல்வேறு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க திணறிவருகிறது. மேலும், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 5 வந்து நாளாக 3 லட்சத்தைத் தொட்டிருக்கிறது.

முன்னதாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு உறுதுணையாக இருப்போம் என அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் பெருமதிப்பிற்குரிய ஷேக் அப்துல்லா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பல நாடுகளும் இந்தியாவிற்கு உதவ இருப்பதாக அறிவித்துள்ளன.