UAE Tamil Web

அமீரகத்தில் தவித்துவரும் கேரள மக்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட் : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!

airport

பெருகிவரும் கொரோனா வழக்குகள் காரணமாக குடிமக்கள் தவிர பிறர் யாரும் இரண்டு வாரங்களுக்கு சவூதி வர தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனையொட்டி, அமீரகம் வழியாக சவூதி மற்றும் குவைத் செல்ல முயற்சித்த பல இந்தியர்கள் தற்போது அமீரகத்தில் தவித்து வருகின்றனர்.

இப்படி கேரளாவில் இருந்து அமீரகம் வந்து சவூதி, குவைத்திற்குச் செல்ல முடியாமல் துபாய் மற்றும் ஷார்ஜாவில் தவித்துவரும் மக்களுக்கு 330 திர்ஹம்ஸ் கட்டணத்தில் விமான டிக்கெட் அளிப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டன. அதில், இந்தியர்கள் அமீரகம் வழியாக சவூதி மற்றும் குவைத்திற்குச் செல்ல முயற்சிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

airport
103 Shares
Share via
Copy link
Powered by Social Snap