UAE Tamil Web

அமீரக பாட புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய சிறுவனின் புகைப்படம்..!

izin

அஜ்மானில் உள்ள ஹேபிடெட் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்துவருகிறார்  ஐஸின் ஹாஷ் என்னும் இந்தியச் சிறுவன். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் எடக்கரா பகுதியைச் சேர்ந்த ஐஸினின் தந்தை சோசியல் மீடியா மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி அபுதாபியில் நுண்ணுயிரியல் நிபுணராக இருக்கிறார்.

சரி, விஷயத்திற்கு வருவோம். தனது தந்தையுடன் புதிய வருடத்திற்கான புத்தகங்களை வாங்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார் ஐஸின். 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக கல்வி பாடப்புத்தகத்தின் அட்டையில் ஐஸினின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

இதனைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் சிறுவன் துள்ளிக் குதித்திருக்கிறான். இதுகுறித்துப் பேசிய அவனது தந்தை ஹாஷ் ஜவாத்,” கடந்த 2019 ஆம் ஆண்டு ஷட்டர்ஸ்டாக் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்கள் ஃபேபியோ மற்றும் கிறிஸ்டியானோ ஆகியோர் எடுத்த புகைப்படம் அது” என்றார்.

பின்னர் கல்வி அமைச்சகம் அப்புகைப்படத்தை பள்ளிப் பாடப்புத்தக அட்டையில் வெளியிட தேர்ந்தெடுத்திருக்கிறது. இதனால் புகழ்பெற்ற ஐஸின் ஷார்ஜா, அபுதாபியில் சில தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்குபெற்றுள்ளார். மலையாள படங்கள் சிலவற்றிலும் கால்தடம் பதித்திருக்கிறார் இவர். இந்தியா, அமீரகத்தில் பல பொருட்களுக்கு மாடலாகவும் அவர் இருந்திருக்கிறார்.

izin
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap