UAE Tamil Web

“என் கஷ்டமெல்லாம் ஒரே நாளில் காணாமல் போய்விட்டது” – துபாய் டியூட்டி ஃப்ரீயில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்ற இந்தியர்..!

DDF-draw

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இன்று துபாய் டியூட்டி ஃபிரீயின் மில்லினியம் மில்லியனர் டிரா மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா நடைபெற்றது. இதில் அமீரக வாழ் இந்தியரான ஆப்ரஹாம் ஜாய் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளார்.

மே 27 ஆம் தேதி 361 சீரிஸில் 1031 என்ற எண் கொண்ட டிக்கெட்டினை  ஆப்ரஹாம் வாங்கியிருக்கிறார். ஓஃபா (ofa) டிரேடிங் என்னும் நிறுவனத்தை நடத்திவரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கொரோனா காரணமாக பல்வேறு வகையில் தொழிலில் நஷ்டத்தை சந்தித்துவந்த வேளையில் இந்த பரிசுத்தொகை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,” எனக்கு 60 வயதாகிறது. நான் கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் வசித்துவருகிறேன். எனக்கு இந்த மண் கொடுத்தது ஏராளம். தொழிலில் ஏற்பட்ட தொடர் நஷ்டங்களில் இருந்து என்னை இந்தப் பரிசு வெளியேற்றியிருக்கிறது. இதற்காக நான் எப்போதும் நன்றி சொல்வேன். இந்த பரிசுத்தொகையைக்கொண்டு நான் சில தொண்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கிறேன்” என்றார்.

1999 ஆம் ஆண்டு மில்லினியம் மில்லினர் டிரா துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆப்ரஹாமுடன் சேர்த்து இதுவரையில் 180 இந்தியர்கள் மில்லியனர் ஆகியிருக்கிறார்கள். பொதுவாகவே அமீரக வாழ் இந்தியர்கள் துபாய் டியூட்டி ஃப்ரீயில் அதிகளவில் கலந்துகொள்வது வழக்கமாகும்.

இதைத் தொடர்ந்து ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா நடைபெற்றது. இதிலும் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது.

அமீரக வாழ் இந்தியரான ஸ்ரீநாத் உச்சில் Mercedes Benz GLE 53 4M AMG (Selenite Grey) என்ற காரினை பரிசாக வென்றார். 1775 வது ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா சீரிஸில் 0287 என்ற எண் கொண்ட டிக்கெட்டை அவர் வாங்கியிருந்தார்.

இதுகுறித்துப் பேசியவர்,”DDF ற்கு நன்றி. வெகுநாட்கள் கழித்து என்னுடைய கனவு நிறைவேறியிருக்கிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை” என்றார்.

அப்துல்லா அஹமத் என்னும் எமிராட்டி (55) Range Rover Sport HSE Dynamic 3.0 P360 (Silicon Silver) காரை பரிசாக வென்றார். 1776 வது ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா சீரிஸில் 0090 என்ற எண் கொண்ட டிக்கெட்டை மே 27 ஆம் தேதி அவர் வாங்கியிருந்தார்.

10 வருடமாக தொடர்ந்து இந்தப் போட்டியில் பங்குபெற்றுவரும் அஹமத், அல் முல்லா குரூப்ஸ் என்னும் நிறுவனத்தின் தலைவராவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Aprilia RSV4 Factory (Atomico Racer) பைக்கை  32 வயதான சஞ்சய் அஸ்னானி பரிசாக பெற்றார். 457 வது ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா சீரிஸில் 0886 என்ற எண் கொண்ட டிக்கெட்டை மே 23 ஆம் தேதி அவர் வாங்கியிருந்தார். இவர் இதற்கு முன்பே கடந்த செப்டம்பர் மாதம் Indian Scout Bobber Twenty (Burnished Metallic) பைக்கை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் 422 என்ற சீரிஸில் 0994 என்ற எண் கொண்ட டிக்கெட்டினை வாங்கியிருந்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” நான் மீண்டும் வெற்றிபெறுவேன் என நம்பவில்லை. துபாய் டியூட்டி ஃப்ரீக்கு நன்றி” என்றார். கடந்த 10 வருடமாக இப்போட்டியில் பங்குபெற்றுவரும் அஸ்னானி எமிரேட்ஸ் NBD வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணிபுரிந்துவருகிறார்.

அமீரகத்தில் வசித்துவரும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஹெர்வ் சிக்ளேர் (Herve Ziegler) Indian Scout Icon (Gray/Black Icon) என்ற மோட்டார் பைக்கை பரிசாக வென்றுள்ளார். 458 வது ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா சீரிஸில் 0619 என்ற எண் கொண்ட டிக்கெட்டை ஜூன் 4 ஆம் தேதி அவர் வாங்கியிருந்தார்.

DDF-draw
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap