இந்திய நகைச்சுவை நடிகர் துபாயில் மேடை நிகழ்ச்சியின் போது மரணம்…

Indian comedian dies while performing in Dubai

அனைவராலும் நகைச்சுவையால் அறியபட்ட மஞ்சுநாத் நாயுடு (வயது 36) வெள்ளிக்கிழமை அன்று மேடையில் Standup நகைச்சுவை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஹோட்டல் அல் பர்ஷா -வில் நடைபெற்ற இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில், நாயுடு தான் கடைசியாக நிகழ்ச்சி நடத்தினார். தனது தந்தை மற்றும் குடும்பம் பற்றி கூடியிருந்த மக்களின் முன் கூறினார். தனது கதைகளை கூறி அவர்களை சிரிக்க வைத்தபடி இருந்துள்ளார்.

இதன்பின் அதிக பதற்றத்தினால் எப்படி பாதிக்கப்பட்டேன், என அவர் கூற தொடங்கினார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்து பின் அதில் இருந்து சரிந்து கீழே விழுந்து உயிரிழந்து உள்ளார். ஆனால் இதனை கண்டு கொண்டிருந்தவர்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்து நகைச்சுவையாகவே எடுத்துள்ளனர்.

இதன்பின் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க ஓடோடி வந்தனர். எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த நிலையிலேயே அதிக அளவில் பதற்றத்துடன் இருக்க முற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார்.

அவரின் நண்பர்கள் அதிர்ச்சியில் இருக்க அதில் ஒருவர், ‘மஞ்சுநாத் எதை அதிகமாக விரும்பினாரோ அதை செய்துகொண்டே இறந்துவிட்டார்’ என்று கூறினார்.

நண்பர்கள் நாயுடுவை பற்றிக்கூறுகையில், அவர் அபுதாபியில் பிறந்தவர், ஆனால் பின்னர் துபாய்க்கு தன் குடியிருப்பை மாற்றினார். கடந்த சில ஆண்டுகளாக துபாயில் நடைபெற்ற ரேசி தேசிஸ் ( Racy Desis) இசைக்குழுவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்துள்ளார்.

நாயுடுவிற்கு பெற்றோர்கள் இல்லை, இவருக்கு ஒரே ஒரு சகோதரர் மட்டும் இருக்கிறார். இவருக்கு உறவினர்கள் இங்கே கிடையாது. மேலும், இவருடைய குடும்பம் என்பது இவருடைய அனைத்து கலைகளும் மற்றும் நகைச்சுவை உணர்வும் தான். இவரின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தோகத்வாலா என்பவர் தெரிவித்தார்.

நேரில் சென்றும் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் மஞ்சுநாத் நாயுடுவிற்கு தங்களது இரங்கலை தெருவித்துவருகின்றனர்.

Loading...